ஆக்டினோடஃபுனே போர்டில்லோனை Gamble - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் உடையது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை சுழல் போல் அமைந்தது, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு 0.8-1.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 11-24 X 2-6.3 செ.மீ., குறுகிய நீண்ட நீள்வட்ட-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகிய கூரியது முதல் அதிக்கூரியது; அலகின் தளம் குறுகிய ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் அடிபரப்பிலுள்ள நரம்புகளில் உரோமங்களுடையது, அலகின் மேற்பரப்பில் மையநரம்பை தவிர அனைத்து பகுதிகளும் உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமானவை விளிம்பை நோக்கிய கிடைமட்டத்தில் இணையான பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; அம்பல் வகை மஞ்சரியில் காணப்படுபவை, குட்டையான மஞ்சரி காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கனியும்பொழுது, கருமை நிறமடைகிறது, கனியானது நிரந்தரமான ப்பீரியான்ந்த் கோப்பையில் அமர்ந்தவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல்மட்டத்திலிருந்து 900-2400 மீ. உயரம் வரையுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை - தெற்கு சயாத்திரி மற்றும் பாலக்காடு பகுதிகளிலுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Kew Bull. 129. 1925; Gamble, Fl. Madras 2: 1231. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 394. 2004.

Top of the Page