English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் (பட்டைத்துளைகள்) உடையது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துரு போன்ற உரோமங்களுடையது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு 2.5 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 8.5-21 X 2.5-6 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது-ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமானது, பெர்க்கரண்ட், ஆனால் மெல்லியது, கிட்டதட்ட கிடைமட்டமானது. |
மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை, கூட்டமாகமைந்தது, மிகச்சிறிய மஞ்சரி காம்புடையது. |
கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, கோப்பை போன்ற நிரந்தரமான ப்பீரியான்ந்த் மேல் கனி அமைந்தது, கனியும் போது கருப்பு நிறமடைகிறது; விதை ஒன்றுடையது. |