ஆரல்லியா மலபாரிக்கா Bedd. - ஆரல்லியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குறுஞ்செடி முதல் சிறிய மரங்களாக காணப்படுகின்றன, 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : எளிதில் உதிரக்கூடிய சிறியமுட்கள் (ப்ரிக்கிள்) கொண்டவை.
இலைகள் : இலைகள் இருமுறை சிறகுவடிவக்கூட்டிலைகள் (பைபின்னேட்), 60 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில்கள் இலைக்காம்புடன் ஒட்டியவாறு காணப்படும்; ஒவ்வொரு முதற்காம்பிலும் 7-11 இரண்டாம்காம்பில் சிற்றிலைகள் உடையது (பின்னா), எளிதில் உதிரக்கூடிய சிறியமுட்களுடையது (ப்ரிக்கிள்), ஒவ்வொரு இரண்டாம் காம்பில் 5-9 சிற்றிலைகள் காணப்படுகின்றன, இவை மிகச்சிறிய காம்புடையவை, அதன் அலகு 5.5-10 X 1.8-3 செ.மீ., ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு ரம்பபற்களுடையவை மற்றும் சிலியேட்; இரண்டாம் நிலை நரம்புகள் 7-8 ஜோடிகள் உரோமங்களுடையவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகலமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியது, விரிந்த பேனிக்கில்டு அம்பல் வகை மஞ்சரி, ஒவ்வொரு அம்பல் வகை கிளையிலும் 30 மலர் கொண்டவை; மலர்காம்பு 2 செ.மீ. நீளமானது, அல்லி இதழ்கள் பச்சை கலந்த வெள்ளை நிறமானது, ஒர்பாலானவை மற்றும் இரு பால் மலர்கள் ஒருங்கமைந்த ஒரகமானது (பாலிகேமோ-மொனேசியஸ்).
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 4-5 அறைகள் மற்றும் பக்கங்களுடையது; விதைகள் தட்டையானது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மலைகளில் காணப்படும் திரிந்த பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - தெற்கு சாயாத்திரி.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. t.15. 1871; Gamble, Fl. Madras 1: 567.1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 206. 2004.

Top of the Page