ப்பீல்ஸ்மியாடியா வைட்டியை (Nees) Benth. ex J. Hk. - லாரேசி

இணையான பெயர் : ஹசியா வைட்டியை Nees

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; தண்டின் நுனியிலுள்ள மொட்டு நீண்டது மற்றும் அது ஈட்டி வடிவ செதில்களால் முடியிருக்கும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை முதல் எதிரடுக்கமானது முதல் கிட்டதட்ட எதிரடுக்கமானது, தண்டின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு 0.5-1.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 5-13 X 2.5-6 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, முனை திருகியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது, மேற்பரப்பு பளபளப்பானது, அலகு பிழியப்படும் போது நறுமணமிக்கது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-12 ஜோடிகள், கிளைத்தவை, குறுகிய கோணங்களுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் மற்றும் தண்டின் நுனியிலுள்ள பேனிக்கிள், உரோமங்களற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 2 செ.மீ. நீளமானது; ப்பீரியான்ந்த் இதழ்கள் எளிதில் உதிருபவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக மிக உயர்ந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 400-2000 மீ.) வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - ஆங்காங்கே தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Hooker, Flora of British India 5: 124. 1886; Gamble, Fl. Madras 2: 1221. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 395. 2004; Saldanha, Fl. Karnataka 1: 60. 1996.

Top of the Page