பெண்டிங்கியா கொண்டப்பனா Berry ex Roxb. - அரிக்கேசி

இணையான பெயர் : பெண்டிக்கியா கொடப்பனா Berry

தமிழ் பெயர் : கந்தபனை, வரைகாமுகு, வருகாமுகு.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பனைவகை மரம் 15 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டு வழுவழுப்பானது, சாம்பல் நிறமானது மற்றும் இலை உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
இலைகள் : சிறகுவடிவக்கூட்டிலைகள், 1.5-2 மீ. நீளமானது; சிற்றிலைகள் 60-75 X 2.5-5 செ.மீ., கோட்டு நீள்சதுர வடிவம், 2-3 சிற்றிலைகள் இணைந்து காணப்படுபவை, சிற்றலையின் அலகின் நுனி இருபிளவுகளுடையது; ஒவ்வொரு பிளவுகளும் 5-10 செ.மீ. நீளமுடையது
மஞ்சரி / மலர்கள் : ஸ்ஃபாடிக்ஸ் மஞ்சரி பாளைகள் கூட்டிலைகளுக்கு கீழே உதிர்ந்த இலையின் இலைக்கோணங்களில் காணப்படுபவை; ஸ்பேத் எண்ணற்றது, ஜவ்வு போன்றது, மலர்கள் சிறியது; ஆண்மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானது; பெண்மலர்கள் லைலாக் அல்லது ஊதா (வைலட்) நிறமானது, மஞ்சரி காம்பு கிளைகளுடையது.
கனி / விதை : கனி கோள வடிவைப்போன்றது, சிறிது தட்டையானது, 1-1.2 செ.மீ. குறுக்களவுடையது, சிவப்பு நிறமானது, ஒர் விதை கொண்டது.

வாழியல்வு :

வாழுமிடங்களில் அதிகளவில் காணப்படுபவை, குறிப்பாக செங்குத்தான பாறைகளில், கடல் மட்டத்திற்கு 1000-1900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - அதிலும் தெற்கு சயாத்திரி (அகஸ்த்திய மலை, ஏலமலை, மற்றும் பழனி மலை).

தற்போதைய நிலை :

அரிதானது (நாயர் & சாஸ்திரி, 1988).

சான்று ஏடு :

Fl. Ind. 3: 621.1832; Gamble, Fl. Madras 3: 1555.1998 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 504. 2004.

Top of the Page