கேலோபில்லம் ஏபெட்டலம் Willd. - குளுசியேசி

இணையான பெயர் : கேலோபில்லம் டிசிப்பியன்ஸ் Wt.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிப்புறத்தில் மஞ்சள் நிறமானவை, நன்கு படகு போன்ற பிளவுகளுடையது; உள்பட்டை சிவப்பு நிறமானவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது.
சாறு : நீரைப்போன்றது, உலரும் போது மஞ்சள் நிறமடைகிறது, ஒட்டும் தன்மையுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.3-0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 4-8 X 2-4.5 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி வட்டமானது முதல் சிறு பிளவுடையது (ரெட்யுஸ்), அலகின் தளம் வட்டமானது முதல் சிறிது சதுரமானது (ட்ரன்கேட்), கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; இரண்டாம் நிலை நரம்புகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும், நெருக்கமானது, இணையானவை (பேரலல்), விளிம்பின் இறுதி வரை செல்பவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெள்ளை நிறமானவை, இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), மஞ்சள் கலந்த ப்ரவுன் நிறமானது, முட்டை முதல் நீள்வட்டம் வடிவானது, 1.5 செ.மீ. வரை நீளமானது, ஒர் விதையுடையது.

வாழியல்வு :

பொதுவாக நீரோடைகளின் அருகாமையில் குறைந்த உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Ges. Naturf. Freunde Berlin Mag. 5: 79. 1811; Gamble, Fl. Madras 1: 76. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 39. 2004; Saldanha, Fl. Karnataka 1: 202. 1996.

Top of the Page