கேந்தியம் நீல்கிரன்ஸ் Wt. ரகம் சார்ட்டேசியம் (Gamble) Swamin. - ரூபியேசி

இணையான பெயர் : ப்ளக்ட்ரொனியா நீல்கிரன்ஸ் ரகம் சார்ட்டேசியா Gamble

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் மெல்லியவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 10 X 4.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், இளம்பருவத்தில் அலகின் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு உரோமங்களுடையது, பிறகு அலகின் கீழ்பரப்பு மட்டுமே உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6 ஜோடிகள், மெல்லியவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றவை, சிலசமயங்களில் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் வெள்ளை நிறமானது; மலர்க்காம்பு 0.4 செ.மீ.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தலைகீழ் முட்டை வடிவானது முதல் தலைகீழ் இதய வடிவானது, 1.3 செ.மீ. நீளமானது; விதைகள் 2.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1600-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-நீலகிரி மற்றும் பழனி மலைகளிலுள்ள பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Wight, Icon. Pl. Ind. Orient. 3: 4. t. 1064 (bis) 1846; Gamble, Fl. Madras 2: 625. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 210. 2004.

Top of the Page