சின்னமாமம் ஹைனியானம் Nees - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மெல்லியது, நுண்ணிய சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்காமானவை அல்லது கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றவை; இலைக்காம்பு 0.5-0.8 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 3.5-10 X 1.2-2 செ.மீ.,கோட்டு-ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகிய கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, சார்ட்டேசியஸ், அலகு குறுத்தில் குறைந்தளவு நுண்ணிய உரோமங்களை கீழ்பரப்பிலுடையது; 3-நரம்புகளை தளத்திற்கு சற்று மேலே உடையது, பக்கநரம்புகள் இரண்டும் அலகின் நுனி வரை செல்லாதது; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பை நோக்கிய கிடைமட்டத்தில் இணையான பெர்க்கரண்ட், தெளிவற்று தெரிபவை, மற்ற சிறிய நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி குறைந்த எண்ணிக்கையில் மலர்களுடைய பேனிக்கிள் இலைக்கோணங்களில் காணப்படுபவை, மெல்லியவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1 செ.மீ. நீளமானது; கனியிலுள்ள ப்பீரியான்ந்த் நிரந்தரமானது, ஆழமில்லாத கோப்பை போன்றது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அரிதானது, நீரோடைகள் அருகாமையில் குறைவான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரியில் பூயாம்குட்டி ஆறு (மலையாத்தூர் பிரிவு) மற்றும் மத்திய சயாத்திரியின் கூர்க் பகுதியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Wall., Pl. As. Rar. 2: 76. 1831; Bull.Bot.Surv. India 25: 96. 1983; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 382. 1990.

Top of the Page