சின்னமாமம் ரிப்பேரிம் Gamble - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மெல்லியது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்காமானவை முதல் கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றவை; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 18 X 1.5 செ.மீ., கோட்டு-ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகியது மற்றும் கூரியது அல்லது சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ்; 3 நரம்புகளை அலகின் தளத்திலே அல்லது சற்று மேலேயுடையது, பக்கநரம்புகள் இரண்டும் அலகின் நுனி வரை செல்லாதது; மூன்றாம் நிலை நரம்புகள் நுண்ணிய வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது கிட்டதட்ட தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள்டு சைம் மஞ்சரியில் குறைந்தளவு முதல் எண்ணற்ற மலர்களுடையது, மஞ்சரிக்காம்பு மெல்லியது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி); விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அரிதானது நீரோடைகளின் அருகாமையிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - அரிதாக தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Kew Bull. 1925. 128. 1925; Bull.Bot.Surv. India 25: 114. 1983; Gamble, Fl. Madras 2: 1224. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 396. 2004; Saldanha, Fl. Karnataka 1: 62. 1996.

Top of the Page