கோரிஃபா அம்பராக்குளிபெர்ரா L. - அரிக்கேசி

:

தமிழ் பெயர் : தாளிப்பனை, குடைப்பனை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பனைவகை மரங்கள் 20 மீ. வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டு இலை உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
இலைகள் : இலைகள் வட்டவடிவானது (ஆர்பிக்குலார்) அல்லது பிறைச்சந்திர வடிவானது; மத்திய காம்பு தடித்தது, ஒரங்களில் முட்களுடையது; இலை மடிப்புகளுடையது (ஃபிளிகேட்), இலை அலகு 80-100 கோட்டு-ஈட்டி வடிவ பிளவுகளை கொண்டதாக காணப்படும், அவை தளத்திலிருந்து இலை அலகின் பாதி வரை இணைந்தவை, அலகின் நுனி இருபிளவுகளுடையது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பாளைகள் (ஸ்ஃபாடிக்ஸ் வகை), மரத்தின் நுனியில் தோன்றுவது, நிமிர்ந்தது, பேனிக்கிள்டு பிரமீடைப் போன்று அமைந்தது, ஸ்பேத் எண்ணற்றது, குழாய் போன்றது, மலர்கள் சிறியது; இருபாலானவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி; 1-விதையுடையது

வாழியல்வு :

பகுதி பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 600 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - இயற்கையாக காட்டு மரமாக யானாவில் (வடக்கு கனரா பகுதியில்) காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Sp. Pl. (ed. 2) 1657. 1763; Gamble, Fl. Madras 3: 1561.1998 (re. ed); Cook, Fl. Bombay 1: 808. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 506. 2004.

Top of the Page