கிரிப்டோகேரியா நீல்கிரின்சிஸ் Meisner - லாரேசி

இணையான பெயர் :

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-0.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 6-14 X 3-6 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் நீள்சதுரம்-முட்டை வடிவானது, அலகின் நுனி வட்டமானது-மழுங்கியது அல்லது சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் கூரியது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது, நரம்புகளில் மட்டுமாவது உரோமங்களுடையது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியிலுள்ள குட்டையான பேனிக்கிள், உரோமங்களுடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை-நீள்வட்டமானது, கருப்பு நிறமானது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிக உயரமான மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 1000-2000 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில்) பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - ஆனைமலை, பழனி, நீலகிரி, மற்றும் குதிரமூக் (சிக்மகளூர் பகுதி) பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

DC, Prodr. 15: 71. 1864; Gamble, Fl. Madras 2: 1219. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 397. 2004; Saldanha, Fl. Karnataka 1: 64. 1996.

Top of the Page