டைமொகார்ப்பஸ் லாங்கன் Lour. - சாப்பிண்டேசி

இணையான பெயர் : நெப்புளியம் லாங்கானா (Lam.) Camp.

Vernacular names : தமிழ்ப் பெயர்: காட்டுபூவம், செம்பூவம்மலையாளப் பெயர்: செம்பூவனா, செம்பூன்னா, மலம்பூவத்தி, மலம்பூவன்னா, முலை, பாசாகொட்டா, பொரிபுனாகன்னடப் பெயர்: கானாகிண்டெலிஆங்கிலப் பெயர்: லாங்கன், ஐபால் மரம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை கீரிம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, இளம்பருவத்தில் நுண்ணிய நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், சிலசமயங்களில் இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும், 15-40 செ.மீ. நீளமானது; மத்தியகாம்பு (ராக்கிஸ்) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பல்வினேட்; சிற்றிலைக்காம்பு தடித்தவை, 0.5-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; சிற்றிலை 4-8 (-10) ஜோடிகள், மாற்றுஅடுக்கமானவை, 8-18.5 (-20.3) X 2.5-7 செ.மீ., ஈட்டி வடிவானது அல்லது குறுகிய நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சீராக சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது அல்லது கூரியது போன்றது, சிலசமயங்களில் மெட்டையானது, அலகின் தளம் வட்டமானது முதல் கூரியது, சிலசமயங்களில் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-20 ஜோடிகள், கிட்டதட்ட நோரானது மற்றும் விளிம்பின் அருகில் வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் மற்றும் இலைக்கோணங்களில் காணப்படுபவை, கிளைத்த பேனிக்கிள் வகை மஞ்சரி; மலர்கள் காம்பற்றது.
கனி / விதை : சைசோகார்ப், கோள வடிவமானது, கழலைகளுடையது, சிவப்பு நிறமானது, 1.5 செ.மீ. குறுக்களவுடையது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளில் மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Lour., Fl. Cochinch. 233. 1790; Gamble, Fl. Madras 1: 252. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6:107. 2004; Saldanha, Fl. Karnataka 2: 193. 1996; Cook, Fl. Bombay 1:267. 1903; Almeida, Fl. Maharashtra 1:280. 1996.

Top of the Page