டையோஸ்பைராஸ் அட்டரேட்டா (Thw.) Alston - எபனேசி

இணையான பெயர் : டையோஸ்பைராஸ் எம்பிரியோப்டரீஸ் Pers. ரகம் அட்டரேட்டா Thw.

தமிழ் பெயர் : கஸ்வகெண்டு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : தாங்கு வேர்களுடைய (பட்ரஸ்டு) மரம் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, கருப்பு நிறமுடையது, வெடிப்புகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மஞ்சள் நிறமுடையது, நுனி மற்றும் பக்கவாட்டிலுள்ள மொட்டுகள் கருப்பு நிறமுடையது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 1-1.5 செ.மீ; இலை அலகு 8.5-20 X 3-7 செ.மீ. நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் நீள்வட்ட-ஈட்டி வடிவம், அலகின் நுனி கூரியது முதல் வால் போன்று நீண்டு முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது, தளப்பகுதியில் பருத்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-9 ஜோடிகள், தளத்திலுள்ள ஜோடி நரம்புகள் நெருக்கமானவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது, நரம்புகள் கீழ்பரப்பு மற்றும் மேற்பரப்பில் தெளிவாக காணப்படும்.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும், 3-8 மலர்கள் கொண்ட சைம்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் காணப்படும் மற்றும் சிறிய மலர்காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, 7 செ.மீ. குறுக்களவு கொண்டது, பொன் நிறமான மென்உரோமங்களுடையது, புல்லி இதழ்கள் இலை போன்றது, உட்பகுதியில் அடர்ந்த கருமையான உரோமங்களுடையது; 8 விதைகளை கொண்டது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. முதல் 1400 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு சாயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Triman, Handb. Fl. Sri Lanka 6: 180. 1931; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 46. 2005.

Top of the Page