டைசொசைலம் பிஸிபார்மி (Wt.) Gamble - மீலியேசி

இணையான பெயர் : அமூரா பிஸிபார்மி Wt.; டைசொசைலம் பைநெக்ட்டாரிபெரம் J. Hk.

Vernacular names : மலையாளப் பெயர்: அகில், காரஅகில், பூவில் அகில்.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய மரம், up முதல் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழவழப்பானது, வெளிறிய ப்ரவுன் நிறமானது; உள்பட்டை மஞ்சள் நிறமானவை
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறிய உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், 18 (-22) செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பல்வினேட்; மத்தியகாம்பு 12 செ.மீ. நீளமானது, முக்கோண வடிவானது; சிற்றிலைக்காம்பு 0.4-1 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 3-4 ஜோடிகள், கிட்டத்தட்ட எதிரடுக்கமானவை அல்லது மாற்றுஅடுக்கமானவை, 7-15 X 3-6 செ.மீ., குறுகிய நீள்சதுர-நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது-அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-13 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), தலைகீழ் முட்டை வடிவம் , 5.5 X 4.5 செ.மீ., கனியும் போது சிவப்பு நிறமானது ; விதைகள் 4, கரும்பர்புள் நிறமானது, வெள்ளை நிறமான பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 400 மற்றும் 1300 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - ஏலமலை மற்றும் ஆனைமலை ( தெற்கு சயாத்திரி).

சான்று ஏடு :

Gamble, Fl. Pres. Madras 178 (127). 1915; Gamble, Fl. Madras 1: 178.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 89. 2004; Saldanha, Fl. Karnataka 2: 233. 1996; Cook, Fl. Bombay 1:208. 1903; Almeida Fl. Maharashtra 1: 226. 1996

Top of the Page