டைசொசைலம் மலபாரிக்கம் Bedd. ex Hiern - மீலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: வெள்ளைஅகில், பூரிப்பாமலையாளப் பெயர்: அகில், கான முல்லா, பூரிப்பா, வெள்ளஅகில்கன்னடப் பெயர்: பீலி அகிலு

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய நேரான மரம், முதல் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பெரிய மற்றும் கார்க் போன்ற அடர்த்தியாக லெண்டிசெல் உடையது, பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை மஞ்சள் நிறமானவை மற்றும் வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, சிறிய உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிப்பின்னேட்), முதல் 30 (-40) செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும், பல்வினேட்; மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, 17-20 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.5-0.9 செ.மீ.; சிற்றிலைகள் 4-5 ஜோடிகள், மாற்றுஅடுக்கமானவை அல்லது கிட்டத்தட்ட எதிரடுக்கமானவை , 9-22 X 4-7 செ.மீ., நீள்வட்ட வடிவானது-ஈட்டி வடிவானது; அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 12-20 ஜோடிகள், தடித்தவை, உரோமங்களுடைய டொமேசியா கொண்டவை; மூன்றாம் நிலை நரம்புகள் சிறிது தெளிவானது, வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள் ரெசீம், இலையின் நிளத்தைவிட குட்டையானது; மலர்கள் பச்சை-மஞ்சள் நிறமானவை, நறுமணமிக்கது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்),பைரிபார்ம், வெருக்கோஸ், 7.6 செ.மீ. நீளமானது, கனியும் போது மஞ்சள் நிறமானவை , நீள்வாக்கில் 4-பள்ளங்களுடையது; விதைகள் 3-4, சிவப்பு-ப்ரவுன் நிறமானது, முக்கோண வடிவானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 200 மற்றும் 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. India 1: 548. 1875; Gamble, Fl. Madras 1: 178.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 90. 2004; Saldanha, Fl. Karnataka 2: 233. 1996; Cook, Fl. Bombay 1: 209. 1903.

Top of the Page