English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
வளரியல்பு : | மரம் 10 முதல் 15மீ. உயரம் வரை வளரக்கூடியது |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமுடையது, வெடிப்புகளுடையது; உள்பட்டையின் நிறம் ஆரஞ்சு நிறமுடையது |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறுநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்புடையது, இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 6-12 X 3-5 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது முதல் மழுங்கியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு செரேட் (ரம்பம் போன்ற பற்களையுடையது), உரோமங்களற்றது, கோரியேசியஸ், இலையின் கீழ்பரப்பில் முதல் நிலை நரம்புகளின் கோணங்களில் சுரப்பிகள் காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5 ஜோடிகள், கிளைத்தது, உரோமங்களற்ற டொமேஸ்சியாவை கோணங்களில் கொண்டவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. |
மஞ்சரி / மலர்கள் : | இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம் மஞ்சரி, சிவப்பு நிறமுடையது, 4-7 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; மலர்கள் வெண்மையானது. |
கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தலைகீழ் முட்டை வடிவம், ஏபிகுலேட், 4-5 X 2.5 செ.மீ. வழுவழுப்பானது, மின்னும் பச்சை நிறமுடையது; ஒரு விதை கொண்டது. |