யுஜினியா துவைட்சி Duthie - மிர்ட்டேசி

இணையான பெயர் : யுஜினியா மூனியானா Wt.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 3-9.5 X 1.3-4.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-11 ஜோடிகள், சிலசமயங்களில் கண்களுக்கு புலப்படாது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தவை அல்லது ஒர் ஜோடி, இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, முதல் 2 செ.மீ. குறுக்களவுடையது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை, உரோமங்களற்றது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுககளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1,700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Ic. t. 273. 1868-1874; Gamble, Fl. Madras 1: 484.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 174. 2004; Saldanha, Fl. Karnataka 2: 24. 1996; Cook, Fl. Bombay 1: 494. 1903.

Top of the Page