ஈரையா நிட்டிடா Korth. - தீயேசி

இணையான பெயர் : ஈரையா ஜப்பானிக்கா Thunb.

Vernacular names : கன்னடப் பெயர்: ஹுலுனி, முக்கொரனே

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், வழுவழுப்பானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது மற்றும் பக்கவாட்டில் 2 மேடுகளுடன் அமைந்தவை, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.3-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 2.5-10 X 1.5-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம் அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனையில் சிறு_பிளவுடையது (ரெட்யூஸ்), அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு சிறிய ரம்ப பற்களுடையது, உரோமங்களற்றது, கோரியேசியஸ், கரும்பச்சை நிறமானது மற்றும் அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு வெளிறியது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள், அலகின் மேற்புறத்தில் பள்ளமானது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர் பாலானவை, பச்சை-வெள்ளை நிறமானது, இலைக்கோணங்களில் தொகுப்பாகமைந்தவை, காம்பற்றது அல்லது மிகச்சிறிய காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது, கனியும் போது பர்புள்-கருப்பு நிறமானது; விதைகள் எண்ணற்றது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் விளிம்புகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Temminck, Verh. Nat. Gesch. Bot. 3: 115. t. 17. 1840; Gamble, Fl. Madras 1: 79. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 43. 2004

Top of the Page