பைக்கஸ் ஹிஸ்பிடா L.f. - மோரேசி

இணையான பெயர் : பைக்கஸ் ஆப்போசிட்டிபோலியா Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: சொனா-அத்தி, போய்-அத்திமலையாளப் பெயர்: இருமனாக்கு, காட்டுஅத்தி, பாராகம், தொண்டிதெரக்காம், பாவாக்ம், போயத்தி, பெரிம்தெரக்க்ம், போயஅத்திபாராக்கா, வள்ளிதெரகாம்கன்னடப் பெயர்: காட்-அத்தி, பெரெ மர

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, கணுவிக்கிற்கு இடைப்பட்ட பகுதி குறுக்குவெட்டுத் தோற்றத்தில் துளையுடையது, அடர்த்தியாக ப்ரவுன் நிறமான அல்லது சாம்பல் நிறமான உரோமங்களுடையது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
சாறு : சாறு கிரீம்-வெள்ளை நிறமானது, வெட்டுபட்ட பட்டையிலிருந்து அதிகளவு சுரக்கிறது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் 2.5 X 1 செ.மீ., எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-10 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களுடையது; இலை அலகு 7-35 ´3-16 (இளம்பருவத்தில் 40 X 18 செ.மீ.), நீள்வட்ட -நீள்சதுர வடிவானது, குறுகிய முட்டை வடிவானது, குறுகிய தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது சிறிய இதய வடிவானது அல்லது சதுர-சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பற்களுடையது சிலசமயங்களில் ஒழுங்கற்ற பற்களுடையது,அலகின் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு சொரசொரப்பானது, கீழ்பரப்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; 3_நரம்புகளை_தளத்திலே உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-9 ஜோடிகள், பொரும்பாலும் கிளைத்தவை, நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், தொகுப்பாக மரத்தண்டிலுள்ள கழலைகள் மேல் அல்லது தெங்கிய இலைகளற்ற கிளைகள் மற்றும் முதிர்ந்த கிளைகளில் தோன்றுபவை; மலர்கள் ஓர் பாலானவை.
கனி / விதை : சைகோனியம், கோளவடிவானது, 2.5 செ.மீ. குறுக்களவுடையது.

வாழியல்வு :

மரங்கள் திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் ஆஸ்திரேலியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Suppl. Pl. 442. 1781; Gamble, Fl. Madras 3: 1367.1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 440. 2004; Saldanha, Fl. Karnataka 1: 117. 1984; Cook, Fl. Bombay 2: 653. 1902; Almeida, Fl. Maharashtra 4b: 368. 2003.

Top of the Page