English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | பசுமைமாறாமரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது, தொங்கு வேர்களுடையவை, இளம்பருவத்தில் பொரும்பாலும் ஒட்டு செடியாக ஆரம்பிக்கின்றன. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை பச்சை நிறம், வழவழப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது. |
சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 0.5 செ.மீ. நீளமானது, முட்டை வடிவானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 5- 12.7 X 1.2-6.4 செ.மீ., முட்டை வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது முதல் வால் போன்றது அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு-கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி சைகோனியம், காம்பற்றது, ஒர் ஜோடியாக இலைக்கோணங்களில் காணப்படுபவை, அழுத்தப்பட்ட கோள வடிவமானது; மலர்கள் ஓர் பாலானவை. |
கனி / விதை : | சைகோனியம் கோளவடிவானது, 0.5-0.6 செ.மீ. குறுக்களவுடையது. |