பைக்கஸ் வைரன்ஸ் Ait. - மோரேசி

இணையான பெயர் : பைக்கஸ் இன்பொக்ட்டொரியா Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: மலை-இச்சி, குருகட்டிமலையாளப் பெயர்: செருலாகன்னடப் பெயர்: பாசாரிமரா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், குறைந்த எண்ணிக்கையில் தொங்கு வேர்களுடையவை.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற_வளையமானது; மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
சாறு : வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 1 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 3.7-6 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-17.5 X 3-10 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்சதுர வடிவானது, நீள்சதுர-முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் சதுர வடிவானது, வட்டமானது அல்லது சிறு_பிளவுடையது (ரெட்யூஸ்), அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது, கோரியேசியஸ்; தளத்திலே 3_நரம்புகளை உடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-15 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், ஜோடியாக இலைக்கோணங்களில் காணப்படுபவை, 1-1.5 செ.மீ. குறுக்களவுடையது, கோளவடிவானது, பொரும்பாலும் தலைகீழ் கூம்பு வடிவானது; மலர்கள் ஓர் பாலானவை.
கனி / விதை : சைகோனியம், கனியும் போது பிங்க் நிறமானது; சிற்றுலர்கனி (அக்கீன்) வழவழப்பானது.

வாழியல்வு :

மரங்கள் திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் சாலமன் தீவுகள்; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Hort. Kew (ed.1) 3: 451. 1789; Gamble, Fl. Madras 3: 1362. 1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 442. 2004; Saldanha, Fl. Karnataka 1: 120. 1984; Cook, Fl. Bombay 2: 651. 1902; Almeida, Fl. Maharashtra 4b:378. 2003.

Top of the Page