கோனியோதலாமஸ் ரைன்கேன்திரஸ் Dunn - அனோனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, கறுமை நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோண வடிவானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.3 செ.மீ, நீளமானது, தடித்தது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 8-16.5 X 3.8-6 செ.மீ., நீள்வட்டம் முதல் நீள்சதுரம் சிலவற்றில் குறுகிய நீள்சதுரம்,அலகின் நுனி அதிக்கூரியது (கொஞ்சம் கொஞ்சமாக இலை பரப்பு குறுகியது) மற்றும் மழுங்கியது (நுனி 0.5-0.8 செ.மீ. நீளமானது), அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மிகவும் மெல்லியது, சிலவற்றில் விளம்பை ஒட்டிய நரம்புகள் தெளிவாக தெரியாது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனியானது மற்றும் மலர்காம்பு நீண்டது, இலைக்கோணங்களில் மலர்களுடையது, பச்சை கலந்த வெள்ளை நிறம், சிறு உரோமங்களுடையது.
கனி / விதை : ஒரு விதையுள்ள கொத்தான முழுச்சதைகனி (பெர்ரி), நீள்சதுரம் முதல் தலைகீழ் முட்டை வடிவம், காம்புடையது, உரோமங்களற்றது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600-1200 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - அகஸ்த்திய மலை உள்ள தெற்கு சயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

Bull. Misc. Inf. Kew 1914: 182. 1914; Gamble, Fl. Madras 1: 19. 1997 (re. ed); Mohanan and Sivadasan, Fl. Agasthymala 54. 2002; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 17. 2004.

Top of the Page