ஹோலிகர்னா அர்நாட்டியானா J.Hk. - அனகார்டியேசி

இணையான பெயர் : ஹோலிகர்னா லான்ஜிஃபேலியா Wt. & Arn.

தமிழ் பெயர் : கருஞ்செரு, கருங்கரை, கருஞ்சாரை, காட்டுசெரு.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம், 35 மீ. உயரமுடையது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புடையது மற்றும் நீர் கோர்த்தது போன்ற எழும்பிய அமைப்புடையது (புஸ்டுலார்).
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறிய நுனிக்கிளைகள் தடிமனாகவும், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றும் காணப்படும்.
சாறு : பால் போன்ற திரவம் பின் கருப்பு நிறத்துக்கு மாறிவிடும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.8-2.5 செ.மீ., நீளமுடையது மற்றும் அதனுடன் ஒரு ஜோடி ஸ்பர் உடையது (உரோமங்களற்றது மற்றும் சிலசமயம் உதிரக்கூடியது), குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 10-2 X 52.5-7.6 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவம் , அலகின் நுனி மழுங்கியது முதல் சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு இலையின் மேற்பரப்பைவிட உயர்ந்து காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், 12-24 செ.மீ. நீளம், தங்க-மஞ்சள் நிறமுடைய சிறு மென்உரோமங்களானது; மலர்கள் ஒர்பாலானவை-இருபாலானவை, வெளிறிய பச்சை நிறம்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சாய்ந்த முட்டை வடிவம், உரோமங்களற்றது, நுனிப்பகுதி வட்டமானது 3 செ.மீ. நீளம், பூத்தண்டு கிண்ணம் கனியை முழுவதும் மூடியிருக்கும்; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, 1200 மீ. உயரம் வரையுள்ள மலைகளிலுள்ள அதிக மழை பெறும் அதிகமுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகள் மற்றும் இலையுதிர்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது (மத்திய மற்றும் தெற்கு சயாத்திரி).

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. Ind. 2: 36. 1876; Gamble, Fl. Madras 1: 268. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 204-205. 1996; Cook, Fl. Bombay 1: 279. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 111. 2004.

Top of the Page