ஹோப்பியா பொங்கா (Dennst.) Mabberly - டிப்டிரோகார்ப்பேசி

இணையான பெயர் : ஆர்டோகார்பஸ் பொங்கா Dennst.; ஹோப்பியா வைட்டியானா Wall.

தமிழ் பெயர் : காம்பாக்கம், இலபொங்கு, பொங்கு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மெலிதான வழுவழுப்பான பட்டை, வெடிப்புகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள் பொதுவாக தொங்கியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மென்உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு கொண்டது; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, வெண்மையான மென்உரோமங்களுடையது 1.3 செ.மீ., நீளமானது; இலை அலகு 11-31 X 2.5-7.5 செ.மீ., குறுகிய நீள்சதுரம், அலகின் நுனி கூரியது அல்லது வால் போன்று குறுகி நீண்டது, பொதுவாக வட்டமானது, அலகின் தளம் வட்டமானது, சிறிய இதய (கார்டேட்) வடிவானது அல்லது (சப்கார்டேட்), சார்ட்டேசியஸ் அல்லது சப்கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 7-12 ஜோடிகள், சிறிது சிறிதாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் கொண்ட பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : பேனிக்கிள்டு ரெசீம் மஞ்சரி, உரோமங்களற்றது; மலர்கள் வெண்நிறமுடையது.
கனி / விதை : உலர்கனி (நட்) 3 சிறிய மற்றும் 2 நீளமான நிரந்தரமான புல்லி இதழ்கள் உடையவை; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

பொதுவான மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Taxon 28: 587. 1979; Gamble, Fl. Madras 1: 82. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 45. 2004; Saldanha, Fl. Karnataka 1: 194. 1996.

Top of the Page