ஹோப்பியா ராக்கோஃபோலியா Dyer - டிப்டிரோகார்ப்பேசி

:

தமிழ் பெயர் : கருங் கோங்கு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கருப்பு நிறம், உரியக்கூடியது; பட்டையின் உட்புறம் கிரீம் நிறம்
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு கொண்டது; இலைக்காம்பு 1-3 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 11.5 X 6. 5 செ.மீ. முட்டை வடிவமுடையது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, உரோமங்களற்றது, பளபளப்பானது,டொமேஸ்சியா இரண்டாம் நிலை நரம்புகளின் கோணங்களில் கீழ்பரப்பில் காணப்படும்; மையநரம்பு மேற்பரப்பில் உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-5 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள், 7.5-10 செ.மீ. நீளமானது, மலர்கள் மஞ்சள் கலந்தவை.
கனி / விதை : உலர்கனி (நட்) மற்றும் புல்லி இதழ்கள் நிரந்தரமானவை; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 700 மீ. உயரம் வரையுள்ள மலைகளில் மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - தெற்கு சாயாத்திரி பகுதியில் உள்ள அகஸ்த்திய மலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மத்திய சாயாத்திரி பகுதியில் உள்ள நிலம்பூர் மலைகளிலும் மற்றும் பிரம்மகிரி மலைகளிலும் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Fl. Brit. India 1: 310. 1874; Gamble, Fl. Madras 1: 82. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 45. 2004; Saldanha, Fl. Karnataka 1: 194. 1996.

Top of the Page