ஹம்போல்டியா வாகிலியானா Wt. - ஃபேபேசி-சிசல்பினிஆய்டியா

:

தமிழ் பெயர் : அட்டவாஞ்சி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை அடர்ந்த அரக்கு நிறம், மெலிதான பிளவு கொண்டது; பட்டையின் உள்புறம் பளபளப்பான வெளிறிய அரக்கு நிறம்
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : கூட்டிலை, இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் ஒரு ஜோடி, இலைபோன்று இருக்கும், 4 X 1.5 செ.மீ., குறுகிய முட்டை வடிவம், அலகின் நுனி வால் போன்று கூரிய நுனி மற்றும் அலகின் தளம் சிறுநீரக வடிவானது; இலைக்காம்பு பல்வினேட், 5-13.5 செ.மீ. நீளமானது, சிறிது இறகு போன்றது, வளையமானது; சிற்றிலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 3 ஜோடிகள், எதிரானது அல்லது சிறிது எதிரானது, அடியில் உள்ள ஜோடி சிற்றிலைகள் மற்றவைகளை விட சிறியது, இலை அலகு 9-25 X 2.5-7 செ.மீ., குறுகிய நீள்வட்டம் அல்லது ஈட்டி வடிவம், அலகின் நுனி சிறிது சிறிதாக குறுகி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ் முதல் கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-13 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெள்ளை நிறம், இலைக்கோணங்களில் அமைந்த ரெசீம், ஆரஞ்சு ப்ரவுன் வெல்வெட்.
கனி / விதை : தட்டையான பாட் கனி (அவரைப்போன்றது), ஆரஞ்சு ப்ரவுன் நிறமான மென்உரோமங்கள் உடையது, 20 செ.மீ. நீளமானது; 4 விதைகள்.

வாழியல்வு :

ஓடைகளின் ஒரத்தில் அல்லது சதுப்பான பகுதிகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - பரவலாக தெற்கு சயாத்திரி மற்றும் தெற்கு மலபார் பகுதியிலும்; அரிதாக வடக்கு மலபார் உள்ளடக்கிய கோழிக்கோடு பகுதியிலும் காணப்படும்.

சான்று ஏடு :

Wight, Ic. 1607 & 1608. 1850; Gamble, Fl. Madras 1: 411. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 155. 2004.

Top of the Page