ஹிட்னோகார்பஸ் அல்பைனா Wt. - ஃப்ளக்கோர்சியேசி

:

தமிழ் பெயர் : ஆட்டுசோன்கலை, கொரங்குதலை, மரவெட்டி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கரும்சாம்பல் நிறமுடையது, சொரசொரப்பானது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களற்றது, கிளைகள் தொங்கியவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.7-1.6 செ.மீ. நீளமானது, காம்பின் இருமுனைகளும் உப்பியவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றவை; இலை அலகு 9-26 X 2.5-8.5 செ.மீ., பொதுவாக ஈட்டி வடிவானது, அலகின் நுனி சீரான அதிக்கூரியது அல்லது கூரியது போன்றது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, சிலசமயங்களில் அட்டனுவேட் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் பரப்பைவிட மேலெழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-11 ஜோடிகள், நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, தனித்தவை அல்லது சிறிய தொகுப்பாக அமைந்தவை, வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 6.5 செ.மீ. குறுக்களவுடையது, ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது, கனியின் வெளிப்புற பகுதி (பெரிகார்ப்) தடித்தவை; விதைகள் எண்ணற்றவை.

வாழியல்வு :

அதிகமாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1600 மீ. உயரமான மலைகள் வரை காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரியின் மலநாடு பகுதிகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Wight, Ic. 942. 1845; Gamble, Fl. Madras 1: 52. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 33. 2004; Saldanha, Fl. Karnataka 1: 272. 1996.

Top of the Page