English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | சிறிய மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது , ஒழுங்கற்ற பெரியவை பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, தடித்தவை, இளம்பருவத்தில் உரோமங்களுடையது. |
சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.7-1.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 4-11 X 1.5-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மெட்டையானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு அலை போன்றது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான நெருக்கமான பெர்க்கரண்ட். |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் தொகுப்பாக காணப்படுபவை; மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது. |
கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), தலைகீழ் முட்டை வடிவானது; ஒர் விதையுடையது. |