கிஞ்ஜியோடென்டரான் பின்னேட்டம் (Roxb. ex DC) Harms - ஃபேபேசி-சிசல்பினிஆய்டியா

இணையான பெயர் : ஹார்ட்விக்கியா பின்னேட்டா Roxb. ex DC

தமிழ் பெயர் : குலவு, கொடப்பாலை, மடையன் சாம்பிராணி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறம் மற்றும் வெடிப்புகளுடையது, பட்டையின் உட்புறம் பளபளப்பான பிங்க் நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
சாறு : வெட்டிய மரத்திலிருந்து எண்ணெய் போன்ற பிசின் சுரக்கும்.
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலை (இம்பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு பல்வினேட், வளையமானது, 6-10 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.3-0.7 செ.மீ. நீளமானது, நுனியில் உள்ள சிற்றிலையின் தளப்பகுதியில் சிறிய சூபுலேட் சுரப்பி போன்று காணப்படும்; சிற்றிலைகள் 4-7, மாற்றுஅடுக்கமானவை, இலை அலகு 4.5-9 X 1.7-4.5 செ.மீ., சமமற்றது-அரிவாள் போன்றது அல்லது குறுகிய முட்டை-நீள்வட்டம் முதல் குறுகிய நீள்சதுரம், அலகின் நுனி வால் போன்று நீண்டு அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், தெளிவான புள்ளி போன்ற சுரப்பிகள் காணப்படும்; மையநரம்பு சிறிது மேற்பரப்பில் உயர்ந்த; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கில்டு ரெசீம்; மலர்கள் சிறியது, மற்றும் எண்ணிக்கை அதிகமானது, வெள்ளை நிறமான மலர்கள்.
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), நீள்வட்டம் அல்லது நீள்சதுரம் 3.5 X 3 செ.மீ. வரை நீளமானது; தட்டையானது காம்பை ஒட்டிய பகுதி வளைவானது, கோரியேசியஸ்; ஒரு விதை கொண்டது, தட்டையானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு சயாத்திரி மற்றும் மத்திய சயாத்திரி (கூர்க் பகுதி வரை) பகுதிகளில் காணப்படும்.

சான்று ஏடு :

Engler & Prantl, Nat. Pflanzenf. 1: 194. 1897; Gamble, Fl. Madras 1: 412. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 156. 2004; Saldanha, Fl. Karnataka 1: 391. 1996.

Top of the Page