English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பொரும்பாலும் வழவழப்பானது, ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் வர்டிசில்லேட் மற்றும் நிலத்திற்கு கிடைமட்டமானது; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துருப்போன்ற உரோமங்களுடையது. |
| சாறு : | மரத்தின் பட்டை வெட்டப்படும் போது சிவப்பு நிற பால் அதிகளவு சுரக்கிறது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.3 செ.மீ., தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது மற்றும் முதிரும் போது உரோமங்களற்றது; இலை அலகு 12-23 X 3.5-8 செ.மீ., குறுகிய நீள்சதுர வடிவானது முதல் நீள்சதுர வடிவானது அல்லது குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி சீராக கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ் முதல் சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு மெழுகுபூசியது (க்களாக்கஸ்) போன்றது, இளம்பருவத்தில் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் தெளிவானது, 13-21 ஜோடிகள், சீராக வளைந்தது, தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான சாய்ந்தவாறு பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர் பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண் மஞ்சரி குட்டையான காம்புடையது, இலைக்கோணங்களில் காணப்படுபவை, நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; பெண் மலர்கள் 1-3, மலர்காம்பு 0.8 செ.மீ. நீளமானது. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சியூல்), நீள்வட்ட வடிவானது, 4 செ.மீ. நீளமானது, 2-அறைகளுடையது, நுனி நீட்சியுடையது, உரோமங்களுடையது; ஒரு விதையுள்ள கனி, விளிம்களில் பிளவுடைய கிரிம்சன்-சிவப்பு நிறமான பத்ரி (ஏரில்) உடையது. |