லிட்சியா வைட்டியானா (Nees) J.Hk. - லாரேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 2.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 4.5-15 x 2-9 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அட்டனுவேட் அரிதாக மெட்டையானது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் பின்புறம் சிறிது வளைந்து காணப்படும், அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது, சப்கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய பெர்க்கரண்ட்..
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சிறுஅம்பல் வகை ரெசீம் மஞ்சரி; மஞ்சரிகாம்பு 1.5 செ.மீ. நீளமானது; மலர்கள் ஓர் பாலானவை, காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1.5 செ.மீ. குறுக்களவுடையது, நிரந்தரமான ப்ரீயான்த் இதழ்கள் உடையது.

வாழியல்வு :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை.

காணப்படும் இடம் :

ஆங்காங்கே பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 2000 மீ. உயரமுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Kew Bull. 132. 1925; J. Econ. Taxon. Bot. Vol. 29 (4) 828-830.

Top of the Page