ஹோலிகர்னா பெருஜீனியே - அனகார்டியேசி வாழியல்வு : மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, உயரம் குறைவான மற்றும் சராசரி உயரமுள்ள (கடல் மட்டத்திலிருந்து 1300 மீ. உயரம் வரையான) மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும். காணப்படும் இடம் : மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது அரிதாக தெற்கு சயாத்திரி மலைகளில் மற்றும் பரவலாக மத்திய சயாத்திரி மலையிலும் காணப்படுகிறது. சான்று ஏடு : Rev. Anacard. 171. 1869; Gamble, Fl. Madras 1: 268. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 205. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 111. 2004.