மீலியொஸ்மா பின்னேட்டா (Roxb.) Walp. மிகசி. பார்புலேட்டா (Cufod.) Beus. - சாபீயேசி

இணையான பெயர் : மீலியொஸ்மா பின்னேட்டா (Roxb.) Walp. மிகசி. ஆர்நோட்டியானா (Wt.) Beus; மீலியொஸ்மா ஆர்நோட்டியானா (Wt.) Walp.

Vernacular names : தமிழ்ப் பெயர்: குசவி, தாகாரி, ஹுல்லிமாக்கைமலையாளப் பெயர்: காலவி, கல்யாவிகன்னடப் பெயர்: ஹுல்லிமாக்கை, ஹுல்லிமாக்கி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது மற்றும் ஆரஞ்ச் நிறமான புள்ளிகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் கிட்டதட்ட வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, துருப்போன்ற உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துருப்போன்ற உரோமங்களுடையது, பல்வினேட்; சிற்றிலைக்காம்பு 0.2-1.5 செ.மீ. நீளமானது, துருப்போன்ற உரோமங்களுடையது; சிற்றிலை 3-7 ஜோடிகளுடன் நுனியில் தனி சிற்றிலையுடையது, கிட்டதட்ட எதிரடுக்கமானவை அல்லது எதிரடுக்கமானவை, 6.5-15 x 2.5-5 செ.மீ., ஈட்டி வடிவானது முதல் முட்டை-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சீராக அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது மற்றும் கூரியது அல்லது வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, சிலசமயங்களில் ஆங்காங்கே பற்களுடையது, மெல்லிய கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பில் மையநரம்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் மற்றும் இலைக்கோணங்களில் காணப்படுபவை, பேனிக்கிள் வகை மஞ்சரி, உரோமங்களுடையது; மலர்கள் பச்சை நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோள வடிவமானது, 0.5 செ.மீ. குறுக்களவுடையது; ஒர் விதையுடையது, வழுவழுப்பானது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800-1800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி (பாலக்காடு, நீலகிரி மற்றும் பாபாபுடான்கிரி மலைகள்) பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Dassan. & Fosb., Rev. Handb. Fl. Ceylon 3: 384.1981; Gamble, Fl. Madras 1: 256. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 110. 2004;; Saldanha, Fl. Karnataka 1: 102. 1984.

Top of the Page