மெமிசிலான் அங்குஸ்டிஃபோலியம் Wt. - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரங்கள், 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.3-0.4 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 3-9.5 X 0.5-1.9 செ.மீ., குறுகிய கோட்டு-நீள்வட்ட வடிவம் முதல் கோட்டு-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது, கோரியேசியஸ்; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட பள்ளமானது, இண்ட்ராமார்ஜினல் நரம்பு (விளிம்பு நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்குப் புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும், அம்பல், நீல நிறமானவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, கருப்பு-பர்புள் நிறமானது, 0.7 செ.மீ. குறுக்களவுடையது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

நீரோடைகள் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் காணப்படும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக குறைவான உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 300 மீ. வரை) மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - அரிதாக தெற்கு சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Wight, Ic. t. 276. 1840; Gamble, Fl. Madras 1: 504. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 181. 2004. Saldanha, Fl. Karnataka 2: 39. 1996.

Top of the Page