மெமிசிலான் லஸிங்டோனை Gamble - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகச்சிறிய மரங்களாக 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்காமானவை, குறுக்குமறுக்குமானவை, இலைக்காம்பு 0.3-0.4 செ.மீ.; இலை அலகு 3-8.7 X 0.8-4 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்டம் அல்லது தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது அல்லது சிறு பிளவுடையது (ரெட்யுஸ்), அலகின் தளம் கூறியது முதல் சிறிது அட்டனுவேட் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, உலரும் போது பச்சை நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெளிறிய நீல நிறமானது, சிறு தொகுப்பானது, இலைக்கோணங்களில் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, சிறிய மஞ்சரி காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 0.2-0.3 செ.மீ., குறுக்களவுடையது, விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

பொதுவாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக குறைந்தளவு மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, சிலசமயங்களில் அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளின் உலர்ந்த பகுதிகளில் மற்றும் காடுகளின் விளிம்புகளில் காணப்படுகின்றன, குறிப்பாக கடல்மட்டத்திலிருந்து 300-1400 மீ. உயரம் வரையுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்திய; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Bull. Misc. Inform. Kew. 1919: 227. 1919; Gamble, Fl. Madras 1: 503. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 181. 2004; Saldanha, Fl. Karnataka 2: 39. 1996.

Top of the Page