மில்லியோஸா இண்டிகா Lesch. ex A. DC. - அனோனேசி

இணையான பெயர் : மில்லியோஸா மான்டானா Gard. ex J.Hk. & Thoms.; மில்லியோஸா இண்டிகா Lesch. ex DC ரகம் மான்டானா (Gard. ex J.Hk. & Thoms.) J.Hk. & Thoms.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குத்துச்செடி அல்லது சிறிய மரம், 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : புதிதாகத் தோன்றிய சிறிய நுனிக்கிளைகள் உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.1-0.2 செ.மீ. நீளம், உரோமங்களுடையது; இலை அலகு 5-7 X 2-2.7 செ.மீ., முட்டை வடிவம், மேற்பரப்பில் உரோமங்களற்றது, புதிதாகத் தோன்றிய இலையின் கீழ்பரப்பு உரோமங்களுடையது; அலகின் நுனி கூர்மையானது முதல் மழுங்கியது, அலகின் தளம் வட்டமானது, இரண்டாம் நிலை நரம்புகள் 12 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தனியானது, இலைக்கோணங்களில் அமைந்தவை, வெண்மை நிறம், நறுமணம் நிறைந்தது; மலர்காம்பு 0.7-1.5 செ.மீ. நீளம், உரோமங்களற்றது.
கனி / விதை : கொத்தான இரண்டு விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, குறுக்குவெட்டில் 0.7-1.0 செ.மீ., சிவப்பு, உரோமங்களற்றது, காம்பு சராசரியாக 0.5 செ.மீ. நீளம்.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகள் மற்றும் மழை குறைவான பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.

சான்று ஏடு :

Candole, Mem. Anon. 37. 1832; Gamble, Fl. Madras 1: 22. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 18. 2004; Cook, Fl. Bombay 1:15. 1902.

Top of the Page