மைமுசாப்ஸ் இலன்ஜி L. - சப்போட்டேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: மகிழம்மலையாளப் பெயர்: பாகுலம், இலன்ஜி, இலனி, முக்குராகன்னடப் பெயர்: பொக்கலத்து

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரங்கள் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கரும்சாம்பல் நிறமானது, நீள்வாக்கில் வலைப்பின்னல் பிளவுகளுடையது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : வெள்ளை நிற பால் சுரக்கிறது.
சாறு : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1-2.5 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது மற்றும் நுனிப்பகுதியில் சிறிது கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது; இலை அலகு 7-14 X 2.5-7 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு சிறிது அலை போன்றது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 18 ஜோடிகள், மெல்லியவை, ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெள்ளை நிறமானது, இலைக்கோணங்களில் தொகுப்பாகமைந்தவை; மலர்காம்பு 2 செ.மீ.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, கனியும் போது சிவப்பு-ப்ரவுன் நிறமானது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Linnaeus, Sp. Pl. 349. 1753; Gamble, Fl. Madras 2: 765. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 268. 2004; Saldanha, Fl. Karnataka 1: 332.1984; Cook, Fl. Bombay 2: 95.1908; Almeida, Fl. Maharashtra 3:169. 2001

Top of the Page