மிட்ரிபோரா ஹைனியானா (J. Hk. & Thoms.) Thw. - அனோனேசி

இணையான பெயர் : ஓரோபியா ஹைனியானா J.Hk. & Thoms.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4-0.6 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 4-10 x 2-3.8 செ.மீ., குறுகிய முட்டை வடிவம் முதல் நீள்வட்டம்-முட்டை வடிவம், அலகின் நுனி கூர்மையானது அல்லது அதிக்கூரியதுடன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூர்மையானது, முதல் ஆப்பு வடிவம், சிலவற்றில் வட்டமானது, சப்கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, மேற்பரப்பு ஒளிரும் தன்மையுடையது, மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், மெலிதானது, மிதமாக நுனி நோக்கி வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் அதற்கு மேலான நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தனியானது, அல்லது 2-3 மலர்கள், இலையின் எதிர்புற அமைந்த சைம், மஞ்சள் கலந்த பிங்க்; மலர்காம்பு 0.3-0.5 செ.மீ.
கனி / விதை : கொத்தான 1-3 விதைகள் கொண்ட முழுச்சதைகனி (பெர்ரி) சிறியகாம்புடையது, கோளவடிவானது அல்லது வட்டமானது மற்றும் இரண்டு விதைகளுக்கு நடுவில் குறுகியது; மஞ்சள் நிறமான மெல்லிய உரோமங்களுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை குறைந்த பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை (அகஸ்த்திய மலையின் கிழக்கு சரிவு, வருசநாடு மலை, நீலகிரி) மற்றும் ஸ்ரீலங்கா.

சான்று ஏடு :

Thwaites and Hooker, Enum. Pl. Zeyl. 8. 1864; Gamble, Fl. Madras 1: 19. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 18. 2004.

Top of the Page