நியோலிட்சியா ஸ்கரபிக்குலேட்டா (Meisner) Gamble - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 16 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது; உள்பட்டை கிரீம் நிறமானது மற்றும் ஆரஞ்சு நிறமான புள்ளிகளுடையவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 3 (-6) செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7.5-13 X 3.5-5.5 செ.மீ., நீள்வட்டம்-முட்டை அல்லது அகன்ற நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது-அட்டனுவேட், அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது மற்றும் மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), மேல்பரப்பில் ஸ்கராபிகுலேட், கோரியேசியஸ்; மூன்று நரம்புகள் அலகின் தளத்திற்கு சற்று மேலேமைந்தது, 3 பக்கநரம்புகளை இரண்டாம் நிலை நரம்புகளாக கொண்டவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் வகை, இலைக்கோணங்களில் அல்லது பக்கவாட்டில் கூட்டமாகமைந்தவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது; 1 செ.மீ. குறுக்களவுடையது, கோப்பை போன்ற ப்பீரியான்ந்த் கொண்டது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

ஆங்காங்கே காணப்படும் மரங்களாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000-2400 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரி மற்றும் நீலகிரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Gamble, Fl. Madras 2: 1240. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 400. 2004; Saldanha, Fl. Karnataka 1: 70. 1996.

Top of the Page