நியோலிட்சியா சிலானிக்கா (Nees) Merr. - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, தண்டின் நுனியில் கூட்டமாக மற்றும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு 1.2-2 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7-11 X 3-3.5 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி சீராக கூரியது மற்றும் கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), சப்கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; 3 நரம்புகளை அலகின் தளத்திற்கு சற்று மேல் உடையது, 4 ஜோடி இரண்டாம் நிலை நரம்புகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் வகை, இலைக்கோணங்கள் அல்லது தண்டின் நுனியில் அமைந்தவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது; கனியிலுள்ள ப்பீரியான்ந்த் மிகச்சிறியது, கனியுடன் வளருவதில்லை மற்றும் பிறைப்போன்ற இதழ்களுடையவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அதிகமாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரம் முதல் மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 1800 மீ. உயரம் வரை வளரக்கூடியது.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுபவை - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Gamble, Fl.Madras 1240: 1925; Gamble, Fl. Madras 2: 1239. 1993 (re. ed); Saldanha, Fl. Karnataka 1: 71. 1996.

Top of the Page