நோத்தோபிஜியா டிரவன்கோரிக்கா Bedd. ex J. Hk. - அனகார்டியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதாகவும், பொன் நிறமான உரோமங்களுடன் காணப்படும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-1.5 செ.மீ. நீளமுடையது, உரோமங்களுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 7-22 X 2-5 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுரம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம்,அலகின் நுனி நீண்டு அதிக்கூரியது முதல் வால் போன்றது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு அலைப்போன்றது, உரோமங்களுடன் காணப்படும். சார்ட்டேசியஸ்; கீழ்பரப்பில் மெழுகு பூசினாற் போல் பச்சை கலந்த வெண்மை நிறம்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது அல்லது சிறிது உயர்ந்து காணப்படும், இரண்டாம் நிலை நரம்புகள் 2-30 ஜோடிகள், மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : ரெசீம் மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது சற்று மேலே அமைந்தது, 1 செ.மீ. நீளமுடையது, மலர்கள் வெள்ளை நிறம், மலர்கள் ஒர்பாலானவை மற்றும் இருபாலானவை கலந்தவை (பாலிகேமஸ்).
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), அழுத்தப்பட்ட கோள வடிவமானது, வரிப்பள்ளங்கள் காணப்படும், உரோமங்களற்றது, 0.5 செ.மீ. குறுக்களவு ஒரு விதை காணப்படும்.

வாழியல்வு :

சிறிய மரம் (அடிமட்ட அடுக்கு மரம்), குறைந்த மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரை) அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளிலும் காணப்படும்.

சான்று ஏடு :

Fl. Brit. Ind. 2: 40. 1876; Gamble, Fl. Madras 1: 265. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 207-208. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 113. 2004.

Top of the Page