ஆக்டொட்ராபிஸ் ட்ராவன்கோரிக்கா Bedd. - ரூபியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, செதில்களாக உதிருபவை; உள்பட்டை வெளிறிய ப்ரவுன்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் நிலத்திற்கு இணையானவை மற்றும் இருமுறை கிளைத்தவை (டைகாட்டாமஸ்); சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, முதிரும் போது வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் முட்டை வடிவானது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 8.5-16 x 3-6 செ.மீ., நீள்வட்டம்-ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது இலைக்கோணங்களுக்கு சற்று மேல் அமைந்தவை, மஞ்சரி காம்புடைய கோரியம்ப் வகை; மலர்கள் வெள்ளை நிறமானது; மலர்காம்பு மெல்லியவை, 0.3 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி); ஒர் விதையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900-1500 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு பகுதிகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-அகஸ்த்தியமலை மற்றும் பொரியார் பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

அரிதானது (நாயர், 1997).

சான்று ஏடு :

Fl. Sylv. T. 327. 1873; Gamble, Fl. Madras 2: 627. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 226. 2004.

Top of the Page