ஒரோபியா சிலானிக்கா J. Hk.& Thoms. - அனோனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குத்துச் செடி அல்லது சிறு மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பொன் நிறமான அடர்த்தியான சிறு மென்உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.1 செ.மீ. நீளமானது, சிறு மென்உரோமங்களுடையது; இலை அலகு 5-8.5 X 2.2-3.5 செ.மீ., நீள்வட்டம் அல்லது முட்டை வடிவம், அலகின் நுனி அதிக்கூரியதுடன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூர்மையானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, மையநரம்பு மேற்பரப்பில் அலகின் மேற்பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-7 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது, தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனியானது அல்லது 2-3 மலர்கள் கொத்தாக காணப்படும், இலைக்கோணங்களில் அமைந்தவை அல்லது அதற்கு சற்று மேல் அமைந்தது; மலர்காம்பு 1.2 மென்சிறு உரோமங்களுடையது.
கனி / விதை : கொத்தான 1-2 விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மிதமான உயரமுள்ள மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை ( தெற்கு சயாத்திரி மற்றும் பாலக்காடு, தமிழ்நாடு மலைகள்) மற்றும் ஸ்ரீலங்கா.

சான்று ஏடு :

Hooker and Thomson, Fl. Ind. 111. 1855; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 33. 1990; Gamble, Fl. Madras 1: 24. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 19. 2004; Saldanha, Fl. Karnataka 1: 47. 1996.

Top of the Page