பிளிரோஸ்டைலியா ஆப்போசிட்டா (Wall.) Alston - செலாஸ்ட்ரேசி

இணையான பெயர் : செலாஸ்ட்ரஸ் ஆப்போசிட்டா Wall.; பிளிரோஸ்டைலியா வைட்டியை Wt. & Arn.

தமிழ் பெயர் : சிறு பயிரி, கருவாலி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரங்கள், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, சிறு செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது; இலை அலகு 4-6 X 1-2 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவம், சிலசமயங்களில் நீள்வட்டம், அலகின் நுனி மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உலரும் போது சாம்பல் நிறமடைகிறது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் அமைந்த சைம் வகை; மலர்கள் நுண்ணியவை, வெள்ளை நிறம்.
கனி / விதை : வெடியாக்கனி, முட்டை வடிவானது, 1-2 அறைகளுடையது; 1-விதையுடையது, பத்ரி (ஏரில்) போன்ற விதையுறை (டெஸ்டா) உடையது.

வாழியல்வு :

குறைவாக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளிலும் மற்றும் கடலோரப்பகுதிகளில் அதிகமான அளவில் காணப்படும் லேட்டரைட்டிக் மண்ணில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 650 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தெற்கு ஆசியா மற்றும் இந்தியப்பெருங்கடல் தீவுகள்; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி மற்றும் மலபார் மற்றும் கர்நாடகத்தின் கடலோரப்பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Trimen, Handb. Fl. Sri Lanka 6: (Suppl.) 48. 1931; Gamble, Fl. Madras 1: 211. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 98. 2004; Saldanha, Fl. Karnataka 2: 98. 1996; Cook, Fl. Bombay 1: 230. 1902.

Top of the Page