பாசல்லிநியேரான் இண்டிகம் Bedd. - குளுசியேசி

:

தமிழ் பெயர் : புதாங்கொல்லி, வடிநாங்கு, வாவிலாவழலா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு வேர்களுடையது (பட்ரஸ்டு), பெரும்பாலும் ஊன்றுகோல் வேர்களுடையது, 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டை துளைகள் (லெண்டிசெல்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
சாறு : பிசின் உடையது (ரெசின்), மிக குறைந்த அளவே உண்டாகின்றன.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1.2 செ.மீ. நீளமுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 10-29 X 3-9 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது சற்று அட்டனுவேட், தடித்த கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றது, மெலிந்தது, சிலசமயங்களில் அலகின் விளிம்புகளில் மூன்றாம் நிலை நரம்புகளுடன் இணைந்து ஒன்றுக்கொன்று வித்தியாசமற்று காணப்படும், இணையானவை மற்றும் மையநரம்பிற்கு கிடைமட்டத்திலுள்ளவை; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரிகள் தண்டின் நுனியில் காணப்படுபவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), கோளவடிவானது, 4 செ.மீ. குறுக்களவுடையது, தழும்புகளுடையது, நுனியில் நீட்சி போன்ற அலகுடையது, உலரும் போது கருமை கலந்த ப்ரவுன் நிறமடைகிறது, ஓர் விதையுடையது.

வாழியல்வு :

காணப்படுமிடங்களில் அதிக எண்ணிக்கையிலும், மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, தாழ்ந்த மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் உள்ளவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரியிலும் மற்றும் மத்திய சயாத்திரியிலும், குறிப்பாக குதிரமூக் பகுதியில் (சிக்மகளூர் பகுதி) அதிகளவில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Linn. Soc. 8: 267. 17. 1865; Gamble, Fl. Madras 1: 77. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 43. 2004; Saldanha, Fl. Karnataka 1: 210. 1996.

Top of the Page