ப்ரிஸ்மொட்டொமெரிஸ் டெட்ரான்றா (Roxb.) K. Schum மிகசி. மலையானா (Ridley) J.T. Johansson - ரூபியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: காட்டுசெம்பங்கி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, முதிரும் போது வலைப்பின்னல் போன்ற பிளவுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது, மஞ்சள்-ப்ரவுன் நிறமானது .
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் அகன்றவை, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.7-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 10-18.5 × 4-6 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி குறைந்த மலர்களுடைய சைம் வகை மஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும் அல்லது இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்கள் வெள்ளை நிறமானது, மணமிக்கது; புல்லி இதழ் குழாய் 0.6-1.8 மி.மீ. நீளமானது; மகரந்தாள்கள் 4.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) போன்றது, 1-2 அறைகளுடையது; விதைகள் 1-2.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளில் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-ஆனைமலை பகுதிகளில் மட்டும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Johansson, Opera Bot. 94. 5-62. 1987; Ayyappan and Parthasarathy, JETB 29. 802. 2005.

Top of the Page