(ப)சைக்கோட்ரியா நீல்கிரின்சிஸ் Deb & Gangop. ரகம் அஸ்டொப்பானா (J. Hk.) Deb & Gangop. - ரூபியேசி

இணையான பெயர் : (ப)சைக்கோட்ரியா கன்ஜேஸ்ட்டா (Wt. & Arn.)

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது முதல் தட்டையானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் காம்புகளுக்கிடையே (இண்ட்ராபீட்டியோலார்) உடையது, தண்டிற்க்கு உறைப்போன்றது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.5-1.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-9 X 2-3.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி சிறிது குட்டையான அதிக்கூரியது முதல் கூரியது, அலகின் தளம் அட்டனுவேட்-டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், உரோமங்களற்றது; மையநரம்பு மற்றும் இரண்டாம் நிலை நரம்புகள் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள், டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும், மஞ்சரி கிளைத்தவை மற்றும் கிளைகள் சைம் வகை மஞ்சரியில் முடிவடைகின்றன; மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 2 பைரீன் உடையது; ஒவ்வொரு பைரீனிம் ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி) காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 2000-2300 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு பகுதிகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் – ஆனைமலை மற்றும் நீலகிரி.

சான்று ஏடு :

Taxon 31: 546. 1982; Gamble, Fl. Madras 2: 640. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 232. 2004.

Top of the Page