ரீன்வார்சியோடென்றான் ஆனைமலையன்ஸ் (Bedd.) Mabb. - மீலியேசி

இணையான பெயர் : லான்சியம் ஆனமலையானம் Bedd.; ரீன்வார்சியோடென்றான் ஆனமலையானம் (Bedd.) Saldanha

Vernacular names : தமிழ்ப் பெயர்: சந்தனவிரி, சந்தான விரிமலையாளப் பெயர்: சிரலம், சின்ன அகில், தேவதகில், வண்டகமின்கன்னடப் பெயர்: சந்தான பீஜா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நுண்ணிய சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், 25 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பல்வினேட்; மத்தியகாம்பு 4.2-11.5 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 5-7, மாற்றுஅடுக்கமானவை, 12 X 5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்ட வடிவானது-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், உரோமங்களுடைய டொமேசியா கொண்டவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பாலிகேமோ-டையிசியஸ், கிரீம்-மஞ்சள் நிறமானவை; ஆண் மலர்கள் பேனிக்கிள் வகை மஞ்சரி ; பெண் மலர்கள் ஸ்பைக் வகை மஞ்சரி அல்லது ரெசீம் வகை மஞ்சரி.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்சதுர வடிவானது, 1.8 செ.மீ. நீளமானது, வெள்ளை நிறமானது; விதைகள் 1-2, வெள்ளை நிறமான சதைப்பற்றான பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

அதிகமானளவில் மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Malaysian For. 45: 452. 1982; Gamble, Fl. Madras 1: 182.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 90. 2004; Saldanha, Fl. Karnataka 2: 235. 1996; Cook, Fl. Bombay 1:210. 1903.

Top of the Page