ரோடெமிர்ட்ஸ் டொமன்டோசா (Aiton) Hassk. - மிர்ட்டேசி

இணையான பெயர் : மிர்ட்ஸ் டொமன்டோசா Aiton

Vernacular names : தமிழ்ப் பெயர்: தவிட்டு கொய்யாமலையாளப் பெயர்: தவிட்டு மரம், கொரட்டா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, செதில்களுடையது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், சாம்பல் நிறமான உரோமங்களுடையது; இலை அலகு 3-7.5 x 1.3-4.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது மற்றும் மூயூக்கரனேட், அலகின் தளம் கூரியது முதல் மெட்டையானது, அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் மற்றும் பின்புறம் வளைந்து காணப்படும், அலகின் கீழ்பரப்பு சாம்பல் நிறமான உரோமங்களுடையது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; அலகின் தளத்திற்கு சற்று மேலே மூன்று நரம்புகளை உடையது; பக்க நரம்புகள் நுனி வரை செல்லக்கூடியவை; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; சிறு நரம்புகள் தடித்தவை வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைம் வகை, இலைக்கோணங்களில் காணப்படுபவை, 8 மலர்களுடையது; மலர்கள் பெரியவை; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது; அல்லி இதழ்கள் ரோஸ்-வெள்ளை நிறமானது; மகரந்தாள் எண்ணற்றவை, ரோஸ்-பிங்க் நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 1 செ.மீ. குறுக்களவுடையது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை; விதைகள் எண்ணற்றவை, சிறுநீரகம் வடிவானது, தட்டையானது.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவைமற்றும் குட்டையான மரங்களுடைய சிறு காடுகளில் காணப்படுவை, 1600 மீ. உயரத்திற்க்கு மேலுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - நீலகிரி, ஆனைமலை மற்றும் பழனி மலைகள்.

சான்று ஏடு :

Flora 25: 35. 1842; Gamble, Fl. Madras 1: 471.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 175. 2004.

Top of the Page