செமிகார்பஸ் டிரவன்கோரிக்கா Bedd. - அனகார்டியேசி

:

தமிழ் பெயர் : காட்டுசெங்கொட்டை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெடிப்புடன் காணப்படும்; உள்பட்டை பிங்க் நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 5-8 செ.மீ. நீளமானது, தடித்தது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, இலைக்காம்பின் தளப்பகுதி பெருத்திருக்கும், உரோமங்களற்றது; இலை அலகு 29-60 X 11-17 செ.மீ., அகன்ற தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி வட்டமானது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 14-18 ஜோடிகள், இணையானது, இலையின் மேற்பரப்பில் தெளிவாக அமைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்கள் மற்றும் தண்டின் நுனியிலும் அமைந்த பேனிக்கிள், உரோமங்களற்றது, மலர்கள் ஒர்பாலானவை.
கனி / விதை : சாய்ந்த நீள்சதுர உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கருப்பு நிறத்தில் 3 செ.மீ. நீளம் வரை இருக்கக்கூடியது, பூத்தண்டு கிண்ணம் கனியை முழுவதும் மூடியிருக்கும், ஒரு விதையுடன் காணப்படும்.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, பொதுவாக மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 600-1200 மீ.) அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு சயாத்திரி பகுதியில் பாலக்காடு கணவாய் இடைவெளிக்கு தெற்கே உள்ள பகுதியில் காணப்படும்.

சான்று ஏடு :

Fl. Sylv. 2: 232. 1870; Gamble, Fl. Madras 1: 267. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 113. 2004

Top of the Page